இப்படியெல்லாமா பெயர் வைப்பாங்க..!ரூம் போட்டு யோசிப்பாங்களோ..

இந்தோனேஷியாவில் தந்தை ஒருவர் தனது மகனுக்கு வித்தியாசமான முறையில் பெயர் வைத்துள்ளார். தங்கள் குழந்தையின் பெயர் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைப்பார்கள்.

அந்த வகையில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என பெயரிட்டுள்ளார். 12 வயதாகும் அந்த சிறுவன் கொரோனா தடுப்பூசி போட வந்த போது தான் அவரின் முழு பெயர் தெரியவந்தது.

இது பற்றி அந்த சிறுவனின் தந்தையிடம் கேட்ட போது crossword puzzle விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால் இந்த பெயரை வைத்ததாக தெரிவித்தார்.

Advertisement