கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்க ஈஸியான டிப்ஸ்

இன்றைய வாழ்க்கை முறையால், கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver Disease) உலகளவில் அதிகரித்து வருகிறது. மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவை இந்த நோயின் முக்கியக் காரணங்களாக உள்ளன.

கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன?

இந்த நோயானது, கல்லீரலில் அதிக அளவில் கொழுப்பு சேரும். ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் தெரியாது. சரியான நேரத்தில் கவனம் செலுத்தாமல் விட்டால், இது கல்லீரல் செயலிழப்பு போன்ற மோசமான நிலைகளை ஏற்படுத்தலாம்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீர் குடிப்பது கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பு சேராமல் தடுக்கும்.

தினசரி உடற்பயிற்சி

காலை யோகா பயிற்சிகள் அல்லது மாலை நடைப்பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகள் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, கொழுப்பை கரைக்க உதவுகின்றன. தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடல்பயிற்சி செய்வது நல்லது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும் உதவும்.

மதுவை முற்றிலும் தவிருங்கள்

மதுபானம் அதிகம் அருந்துவது கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. மதுவை முற்றிலும் தவிர்ப்பது அல்லது அதைக் குறைப்பது கல்லீரலின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவும்.

மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்

மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலையை பாதிக்க, உடலின் கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கக் காரணமாகிறது. தினமும் தியானம், யோகா, மற்றும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் செய்வதன் மூலம் மனஅழுத்தத்தை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

போதுமான தூக்கம்

இரவில் போதுமான அளவு நன்றாக தூங்குவதும் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும் ஆரோக்கியமான கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

Latest Articles