வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

வெந்தயத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. வெந்தயம் உணவுகளிலும், மருத்துவ பொருள்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெந்தய செடியின் பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது.

உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரும் வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருந்தாலும் இருப்பினும் இதை அதிகமாக எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

வெந்தயத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் இருமல், வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சனை, வாந்தி உணர்வு, சிறுநீரில் அதிக துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தேவைக்கு அதிக அளவு வெந்தய விதைகளை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு தேவை இல்லாமல் வியர்வைகள் ஏற்படும்.

வெந்தயம் சில பேருக்கு அலர்ஜிகளை ஏற்படுத்தும். இதன் விளைவாக உடலில் அல்லது தோலில் சிவப்பாக வீக்கம் ஏற்படலாம்.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயின் மருந்துகளோடு இந்த வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் அவருடைய உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறையும். இதனால் உடலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்.

Recent Post