ராஜமௌலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

cinema news in tamil

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் ஐதராபாத்திலிருந்து உக்ரைன் நாட்டிற்கு சென்றனர். 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டது.

படக்குழுவினர் ஐதராபாத் திரும்பியதும் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீடு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement