வெற்றி மேல் வெற்றி.. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியில் வெற்றி..!

சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல லட்ச கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.

இன்னும் பலர் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்து, அதை குரங்குகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்துள்ளனர்.

Advertisement

தற்போது, அந்த குரங்குகள் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி உள்ளன. இதைத்தொடர்ந்து இந்த குரங்குகளுக்கு அடுத்தகட்ட பரிசோதனைக்காக நேற்று 2-வது டோஸ் மருந்து ஏற்றப்பட்டது.

இந்த சோதனையும் வெற்றி பெற்றால் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.