ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை விமானப்போக்குவரத்து ரத்து.

வரும் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக விமானப்போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் 4-வது கட்டம் முடிந்த நிலையில் தற்போது ஜூன் 30 வரை நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து விமானப்போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் “ வரும் ஜூன் 30-ம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தவிதமான சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்தும் இயங்காது.

அவ்வாறு சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவையை தொடங்கினால் அதற்குரிய வகையில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் சூழல்களுக்கு ஏற்ப, கரோனா வைரஸ் பரவலை மதிப்பீடு செய்து அடுத்த கட்ட அறிவிப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.