குழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்

நீங்கள் தினமும் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கண்பார்வை கிடைப்பதற்கான உணவுகளை தருவீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப் பழக்க வழக்கங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

கண் பார்வைக்கு சக்தி தரும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்கள் பெரியவர்களானதும் நல்ல கண் பார்வையோடு இருப்பார்கள். அந்த உணவு வகைகள் என்ன என்பதை இதில் பார்க்கலாம்.

முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளில் உயிர் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் குழந்தையின் கண்களுக்கு இதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பால், தயிர், நெய், வெண்ணை இவற்றை போதிய அளவில் எடுத்துக் கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் இருப்பதால் இதனை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது கண்பார்வை ஆரோக்கியமாக காணப்படும்.

சிவப்பு முட்டைக்கோஸ் கண் பார்வைக்கு நல்லது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வர வேண்டும். இதனால் உங்கள் குழந்தையின் கண்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தினமும் ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தடுக்கும். மாம்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, பசலைக் கீரை ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இது கண் சம்பந்தமான நோய்கள் வரவிடாமல் தடுக்கும்.

மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு நல்லது. பாரம்பரிய பருப்பு மற்றும் அரிசி வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. குதிரைவாலி, சாமை, தினை, வரகு, கைக்குத்தல் அரிசி போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Recent Post