காலை வேளையில் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பது நல்லதல்ல. அதே போல் இனிப்பு மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் குளிர் பானங்களை பருகுவதால் அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களுடன் சேர்ந்து வாயு தொல்லை, குமட்டல், செரிமான கோளாறு போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
காலையில் ஐஸ் காபி பருகுவதால் சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமான உணர்வு ஏற்படும்.
சிட்ரஸ் பழ வகைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.
தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. காபி நல்லதுதான். ஆனால் ஏதாவது நன்றாக உணவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், காபி குடிக்கலாம். காபியை வெறும் வயிற்றில் பருகும்போது இரைப்பை அழற்சி ஏற்படும்.
தக்காளியில் உள்ள டேனிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தை மேலும் அதிகரிக்க செய்யும். இது நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ், புளிப்பான பழங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.