மூளையின் செயல் திறனை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..

இன்றைக்கு இருக்கும் உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்திக்கும் பிரச்சனை ஞாபக மறதி. நினைவுத்திறன் மற்றும் கவனத்திறனை அதிகரிக்கும் சில உணவுப்பொருட்களை பற்றி இங்கு பார்க்கலாம். இந்த உணவுகளை தினமும் உங்கள் உணவுடன் சேர்த்துக்கொண்டால், கவனத்திறன் அதிகரிக்க உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாக்லேட்

நினைவுத்திறனை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கிறது டார்க் சாக்லேட். சாக்லேட் சாப்பிடும் போது மூளையின் அதிர்வெண்களில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே மன அழுத்தம் இருக்கும் நேரங்களில் நீங்கள் தாராளமாக சாக்லேட் சாப்பிடலாம். இனிமேல் இதை சொல்லி குழந்தைகள் அடம் பிடிக்மாமல் இருந்தால் சரி.

Advertisement

முட்டை

வைட்டமின் D அதிகம் உள்ள முட்டைகள், மூளையின் செயலாற்றும் திறனை அதிகரிக்கிறது. இந்த வைட்டமின் தான் ஞாபக சக்தியை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டை கருவில் இருக்கும் ‘கோளின்’ என்ற பொருள் தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சியை கூட அதிகரிக்க உதவும்.

வாழைப்பழம்

‘பொட்டாசியம்’ மற்றும் ‘மெக்னீசியம்’ போன்ற சத்துக்கள் ஞாபக திறனை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. மூளைக்கு தேவையான சக்தியை வழங்குவதில் வாழைப்பழங்கள் கில்லாடிகள். கூர்ந்து கவனிக்கவும், கற்கும் திறனை அதிகரிக்கவும் இவை உதவும்.

கீரை

கீரையில் அதிகளவில் லூட்டின், போலேட், பீட்டா கரோடின் உள்ளது. இது கவனத்திறனை அதிகரிக்க உதவும். கீரைகளை உண்ணும் போது மட்டும் அதிக கவனம் தேவை. சரியாக கழுவிய பின்னர் முக்கால் வாசி வேகவைத்தாலே போதுமானது. அதிகம் வேக வைக்கும் போது. அதிலிருக்கும் சத்துக்கள் கரைந்து விடுகிறது. எனினும் உங்கள் அன்றாட உணவுடன் கீரைகளை எடுத்துக்கொள்ள மறவாதீர்கள்.

கிரீன் டீ

பலரும் சர்க்கரை நோயை குறைக்கத்தான் ‘கிரீன் டீ’ பயன்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுமட்டும் அல்ல மூளைத்திறனை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. இதில் சரியான அளவில் அமினோ அமிலம் உள்ளது. இது நினைவுத்திறன் மற்றும் கவத்திறனை அதிகரிக்கும்.