Search
Search

இதையெல்லாம் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது..!

காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களை பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் எல்லா வீடுகளிலும் இருந்து வருகிறது. பொதுவாக பிரிட்ஜை 30 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது உணவு பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்க உதவும்.

எல்லா வகையான உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது. குறிப்பாக தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

ஆப்பிள்

ஆப்பிள் பழங்களை பிரிட்ஜில் வைப்பதை விட வெப்பமான இடத்தில் வைத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். மேலும் அவை 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

சாக்லெட்

சாக்லெட்டை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவதால் அதன் சுவை மாறுபடலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் இயற்கையாக பழுக்கும் செயல்முறை பாதிப்புக்குள்ளாகும். வாழைப்பழத்தை அறை வெப்பநிலையில் வைக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சீராக இருக்கும்.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை கொண்டது ஆரஞ்சு. கடினமான தோல் கொண்ட ஆரஞ்சுக்கு வெப்பமான சூழல்தான் ஏற்றது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பிரிட்ஜுக்குள் வைப்பதால் அதில் இருக்கும் மாவுச்சத்து குறைந்துவிடும். சுவையும் குறைந்துபோய்விடும். எனவே உருளைக்கிழங்கை உலர்ந்த இடத்தில் வைப்பதுதான் நல்லது.

வெஙகாயம் மற்றும் பூண்டு

வெஙகாயம் மற்றும் பூண்டுகளை வெளியே காற்றோட்டமாக வைத்திருந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இந்த 6 உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது..!

Leave a Reply

You May Also Like