எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. வைரலாகும் நயன்தாரா வீடியோ

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை இயக்கிய போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் நயன்தாரா கையில் அணிந்துள்ள மோதிரம் குறித்து டிடி கேட்டபோது எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று நயன்தாரா தெரிவிக்கின்றார்.

Advertisement