Connect with us

TamilXP

காய்கறிகள் கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கணுமா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்..!

மருத்துவ குறிப்புகள்

காய்கறிகள் கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கணுமா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்..!

காய்கறிகளில் உள்ள சத்துக்கள் கெடாமல் இருக்க காய்கறிகளை நம் ஃப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா காய்கறிகளையும் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியாது. எந்தெந்த காய்கறிகளை எப்படி ஃப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.

கேரட்

கேரட் வாங்கும் போது ஃப்ரெஷ்ஷாக இருக்கும். ஆனால் சில நாட்கள் சென்றபிறகு வதங்கி விடும். இதனை தவிர்க்க ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கேரட்டை போட்டு வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்த தண்ணீரை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் கேரட் 10 நாட்கள் வரை கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயை காம்புடன் வைத்தால் சீக்கிரமே வாடி விடும். பச்சைமிளகாய் கெடாமல் இருக்க அதனை வாங்கிய உடன் காம்பை நீக்கி வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனை தனியாக ஒரு டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் வைக்க வேண்டும்.

முருங்கைக்காய்

முருங்கைக்காய் வாங்கிய உடனே அதனை துண்டுகளாக நறுக்கி வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

இஞ்சி

இஞ்சியை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் ஒரு சிறிய மண் தொட்டியில் மண்ணை நிரப்பி அதனை ஈரமாக்கி அதில் இஞ்சியை புதைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் இஞ்சி கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

வாழைக்காய்

வாழைக்காயை வாழை மரத்திலிருந்து பறித்தது போல் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்றால் அதனை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது. குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை பசுமையாகவே இருக்கும்.

வெங்காயம்

வெங்காயத்தை பெரும்பாலும் கூடையில் வைப்பது தான் வழக்கம். ஆனால் வெங்காயத்தை தரையில் பரப்பி வைத்தால் 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள் பழங்களை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைக்கலாம் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்றால் அதனை அட்டைப்பெட்டியில் வைத்து குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழங்களை காகித பையில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

To Top