Search
Search

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் வரலாறு

ஊர் : கபிஸ்தலம்

மாவட்டம் : தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : கஜேந்திர வரதர்

தாயார் : ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்

ஸ்தலவிருட்சம் : மகிழம்பூ

தீர்த்தம் : ஜடாயுதீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள் : ஆடிப்பௌர்ணமி,கஜேந்திரமோட்சலீலை,வைகாசி விசாகம் தேர்,பிரமோட்சவம்,பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது.

திறக்கும் நேரம் : காலை 7:00மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 7:30 மணி வரை.

விஷ்ணுவின் மிக சிறந்த பக்தனான இந்திராஜும்னன் எனும் மன்னன் சதா விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் உலகத்தை மறந்து விஷ்ணுவை பூஜித்த வேலையில் துர்வாச முனிவர் மன்னரை காண வந்தார்.

மன்னரோ புஜையில் திளைத்து இருந்தார். தான் வந்ததை வெகு நேரம் கவனிக்காத மன்னரை,உரத்த குரலில்,”மன்னா!நீ மிகவும் கர்வம் கொண்டவனாகவும்,பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதால், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,”என சபித்தார். முனிவரின் உரத்த குரல் கேட்டு கண்விழித்த மன்னன் அதிர்ந்து அவரிடம் மன்னிப்பும், பாவ விமோசனமும் கேட்டான்.

temple history in tamil

இவரது நிலை உணர்த்து முனிவர்,”நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்”.அத்துடன் ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காளை பிடிக்கும்.அப்போது நீ “ஆதிமூலமே!’என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும்,”என்றார்.

கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தான். சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி அவ்வழியாக அகத்தியர் மாமுனிவர் வந்து கொண்டுருந்தார். அப்போது சிவ புஜைக்காக அங்கிருந்த குளத்தில் நீராடினார். அங்கு அரக்கன் அகத்தியரின் காலை பிடிக்க கோபம் கொண்ட முனிவர்,”நீ முதலையாக மாறுவாய்,”என சபித்தார்.

அவன் முனிவரிடம் சாப விமோசனம் கேட்டான். அதற்கு முனிவர்,”கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலை பிடிப்பாய், அப்போது அதை காப்பாற்ற திருமால் வருவார்.அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,”என்றார்.

ஒரு முறை கோவில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் கலைக்கவ்வியது.”ஆதிமூலமே! காப்பாற்று’என யானை கத்தியது. அப்பொழுதே கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித்ததாக வரலாறு.

இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.108 திவ்ய தேசங்களில் இது 9 வது திவ்ய தேசம். இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பெருமானை,”ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,’என ஆழ்வார் பாடினார். அன்று முதல் கண்ணன் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும் உடனே வந்து காத்திடுவார் இந்த பெருமாள்.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

You May Also Like