முழு அரசு மரியாதையுடன் பிபின் ராவத்தின் உடல் தகனம்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடல்17 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

உடலை கொண்டு சென்ற ராணுவ வாகனம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. வாகனத்தின் பின்னால் பொதுமக்கள் தேசியக் கொடிகளுடன் வலம் வந்தனர். பிறகு 3:30 மணி அளவில் தகனம் செய்யும் இடத்தில் ராணுவ வாகனம் வந்தடைந்தது.

அங்கு பிரதமர் மத்திய அமைச்சர்கள் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தீபன் ராகத்தின் குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.