முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

கடந்த 10 ஆண்டுகளாக ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட வந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று உடல் நலக்குறைவால் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 88. வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் 1930 ஜூன் 3ம் தேதி பிறந்தார்.

1977 ஆம் ஆண்டில் மார்ச் முதல் சூலை வரை இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

Advertisement

1977 முதல் 1979 வரை இந்தியத் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

1989 முதல் 1990 வரை இந்தியத் தொடர்வண்டித்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

1990 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே வரை இந்தியக் காஷ்மீர் மாநில விவகாரங்களுக்கான அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.

1998 முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 2004 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

2010ம் ஆண்டுவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.