Connect with us

TamilXP

‘தி கோட்’ படத்தின் ரிலீஸ் உரிமை…போட்டி போட்டு வாங்கிய நிறுவனங்கள்

சினிமா

‘தி கோட்’ படத்தின் ரிலீஸ் உரிமை…போட்டி போட்டு வாங்கிய நிறுவனங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘தி கோட்’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் உரிமையை மாநிலம் வாரியாக பிரித்து ஏஜிஎஸ் நிறுவனம் விற்று இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.88 கோடிக்கு கைப்பற்றி உள்ளது.

கேரளாவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் ‘தி கோட்’ படத்தின் உரிமையை வாங்கி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரூ.15 கோடி கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top