60 பவுன் நகையை ஆட்டைய போட்ட மாடர்ன் பெண் சாமியார். தட்டி தூக்கிய போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்தவர் பபிதா என்கிற பவித்ரா. இவர் தன்னை காளியின் அவதாரம் என்று கூறிக்கொள்கிறார். நான் காளியின் அவதாரம் என்றும் தன்னிடம் ஆசி பெற்றுக் கொள்ளுமாறு விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம் கும்பகோணத்தில் நிலம் வாங்கித் தருவதாக கூறி 5.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 60 சவரன் தங்க நகையை ஏமாற்றி வாங்கியுள்ளார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறை பவித்ராவை 6 மாதமாக தேடிவந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் அவர் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படையினர் பவித்ராவின் வீட்டுக்கு சென்று பவித்ராவையும் அவரது தங்கை ரூபாவதியையும் போலீசார் கைது செய்தனர். பிறகு இருவரையும் நிலக்கோட்டை நிலக்கோட்டை அழைத்துச் சென்றனர்.

Advertisement