ஒரு மடிந்த கால்மீது இன்னொரு மடித்த காலை வைத்து அமரும் போது இதனைப் பார்த்தால் பசுவின் முகத்தை போல் காட்சியளிக்கும், அதனால் இந்த ஆசனத்தை கோமுகாசனம் என பெயரிட்டு அழைக்கிறார்கள்.
கோமுகாசனம் செய்முறை
ADVERTISEMENT
தரையில் விரிப்பில் அமர்ந்து வலது முழங்காலை மடித்து குதிங்கால் இடது பின்புறம் அருகே வரும்படியாக கொண்டு வரவேண்டும். அதேபோல் இடது காலை வலது முழங்கால் மேல்தூக்கி வைத்து மடித்து தன் பின்புறம் படும்படியாக ஒட்டி வைக்க வேண்டும்.
பின்னர், வலது கையை வலது தோள்புறமாக மேலிருந்து கீழ்நோக்கியும், இடது கையை பின்புறமாக கொண்டு வந்து வலது கையினை பிடித்து கொள்ள வேண்டும். உடலினை நேராக வைத்திருக்க வேண்டும். சுவாசம் சீராக இருக்க வேண்டும், இதுவே கோமுகாசனம் ஆகும்.
கோமுகாசனத்தின் பயன்கள்
- மனம் மற்றும் உடலுக்கு அமைதியை கொடுக்கும்
- குறுகிய மார்பு விரிவாகும்
- கால்களுக்கு வலிமையை கொடுக்கும்
- மூட்டுவலி வராமல் காக்கும்
- முதுகு நுனி பாகங்களை வலுப்படுத்தும்