ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனம் மீது வழக்கு

பயனர் விவரங்களை சட்டவிரோதமாக கையாண்டதாக கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற தேடுப்பொறி சேவையாக கூகுள் இருக்கிறது. இந்த தளத்தில் ‘இன்காக்னிட்டோ மோட்’ என்ற அம்சத்தில், ஒருவர் எதையாவது தேடும்போது, அவரது அந்தரங்க உரிமையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ‘இன்காக்னிட்டோ மோட்’ அம்சத்தில் பயனாளர்கள் தேடுகிறபோது, அவர்கள் எதையெல்லாம் தேடுகிறார்கள் என்பது கண்காணிக்கப்படாது என்ற நம்பிக்கையில் பயனாளர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை மீறும் வகையில் கண்காணிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சான் ஜோஸ் நகரில் உள்ள மத்திய கோர்ட்டில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.