கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கடந்த 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தை தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்ய உள்ளனர். பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் இப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

Tamil Cinema News

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Advertisement
tamil cinema news

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.