பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : அரசு பள்ளி ஆசிரியர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் திருமலைமூர்த்தி என்பவர் உயிரியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

today tamil news

இந்நிலையில், திருமலைமூர்த்தி மீது அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தனர். ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Advertisement

இதையடுத்து அரசு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையில் திருமலைமூர்த்தி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் திருமலைமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.