சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கபட்டது. கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு நான்காம் நிலையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சில இடங்களை தவிர முக்கிய மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களான அகமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அதிகளவு வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்த நகரங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு விகிதம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 70 சதவிகிதம் பேர் மேலே குறிப்பிட்ட இடங்களில்தான் அதிகமாக உள்ளனர்.
இதன் காரணத்தால், ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும், சில தளர்வுகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 31-ம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் இது சம்பந்தமான அறிவிப்பை பிரதமர் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.