சங்கர் ஆணவக்கொலை வழக்கு..! விடுதலையாகிய கௌசல்யாவின் தந்தை..!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கௌசல்யாவின் தந்தை, சங்கரை ஆணவக் கொலை செய்துவிட்டதாக வழக்கு நடந்தது.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட 6 பேரில் ஐவருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

வாதிப் பிரதிவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.