சந்தானம் நடிக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘குலு குலு’. மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.

லாரி டிரைவரின் ஒருவரின் கதையாக உருவாகும் இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் டப்பிங் பணிகளை சந்தானம் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement