Connect with us

TamilXP

ஹரசாப விமோசன பெருமாள் கோவில் வரலாறு

ஆன்மிகம்

ஹரசாப விமோசன பெருமாள் கோவில் வரலாறு

ஊர்: கண்டியூர்

மாவட்டம்: தஞ்சாவூர்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : ஹரசாப விமோசன பெருமாள், கமலநாதன்

தாயார் : கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம்: கபால மோட்ச புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள்: பங்குனியில் பிரமோட்சவம் , ஐப்பசியில் பவித்ரா உற்சவம், வைகுண்ட ஏகதேசி,கார்த்திகை தீபம்.

திறக்கும் நேரம்: காலை 8:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:30மணி முதல் இரவு 8:00 மணி வரை.

சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது.

சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளியெறிந்தார். பிரம்மஹத்தி தோஷத்தை தொலைக்க,கையில் ஒட்டிய கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார்.

ஒரு இடத்தில அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூர்ணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோவில்.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 7வது திவ்ய தேசம் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

இறைவன் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். சிவனின் சாபம் தீர்த்தத்தால்,இங்குள்ள பெருமாள் “ஹரசாப விமோசனப் பெருமாள்’என்றழைக்கப்படுகிறார். இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார். அவருக்கு “கண்டீஸ்வரர்’எனப் பெயர். பிரம்மனுக்கு கோவில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் காட்சி தருகிறார்.

“ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கணி’ என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூர் அருகிலுள்ள திருப்பூந்துருத்தியை சேர்த்தவர். சிவனுக்கே தோஷம் போக்கிய தலமாதலால். இத்தல பெருமானை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

கோயில் முகவரி
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்.
கண்டியூர்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613202

தொலைபேசி எண் : 9344608150

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

To Top