இஸ்லாமியர்களை கொலை செய்ய வேண்டும்: சாமியார்கள் சர்ச்சை பேச்சு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17 முதல் 19 வரை இந்த சாமியார்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாமியார்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளனர்.

“இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்கள் யுத்தம் நடத்த வேண்டும். அதற்காக இந்துக்கள் ஆயுதங்களை எடுக்க வேண்டும். நாட்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகையை குறைக்க இஸ்லாமியர்களை படுகொலை செய்ய வேண்டும்”. என வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து அமைப்பினர் நடத்திய மாநாட்டில் “இந்து நாட்டை கட்டமைக்கக் கொலை செய்வோம்” என்று, வெறுப்பைத் தூண்டும் வகையில் உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கு நாடு முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Advertisement

நாட்டில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் சாமியார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்வம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.