in

அந்த’ நேரத்தில் வலித்தால் அலட்சியம் வேண்டாம்..!

முன்னுரை:-

கணவன் மற்றும் மனைவி தனிமையில் இருக்கும்போது, பெண்களுக்கு பிரைவேட் உறுப்புகளில் வலி ஏற்பட்டால் என்னென்ன காரணம் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்..

விளக்கம்:-

திருமணமாகிய புதிதில், இளம் ஜோடிகள் அவ்வப்போது தனிமையில் இருப்பது வழக்கம். அப்போது, பெண்கள் அந்த உறுப்பில் வலி ஏற்பட்டால், அது சாதாரண விஷயம் தான். ஆனால், திருமணமாகி பல்வேறு நாட்கள் கழித்தும் பெண்களுக்கு அந்த உறுப்பில் வலி இருந்தால், அது சில பிரச்சனைகளுக்கான விளைவுகள் என்று அர்த்தம். அது தொடர்பாக தற்போது பார்க்கலாம்.

  1. விருப்பமின்மை
  2. பயம், பதட்டம்
  3. கருத்தடை
  4. பாலியல் தொற்று
  5. கர்ப்பப்பை தொற்றுநோய்

விருப்பமின்மை:-

பெண்களுக்கு அந்த விஷயத்தில் விரும்பமில்லை என்றால், அவர்களின் உறுப்பு அதற்கு இடம் கொடுக்காது. அந்த நேரத்தில் கசமுசாவில் ஈடுபட்டால், அது வலியை ஏற்படுத்தும்.

health tips for women

பயம், பதட்டம்

உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை, பயம், பதட்டம் இருந்தாலும், அது உங்களுடையை உறவை அசௌகரியம் ஆக்கும். இதனாலும், பெண்களின் உறுப்பில் வலி ஏற்படும்.

கருத்தடை

கருத்தடைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை சரியாக பயன்படுத்த தெரியாவிட்டாலும், பெண்களுக்கு அந்த நேரத்தில் உறுப்பில் வலி ஏற்படும்.

பாலியல் தொற்று:-

ஒருவர் மட்டுமின்றி, பலரிடம் உறவு வைத்துக்கொண்டாலும் சரி பெண்களின் உறுப்பில் வலி உண்டாகலாம். ஆண் பல பெண்களிடம் உறவு வைத்து விட்டு, தனது மனைவியிடம் உறுவு வைத்துக்கொண்டாலும் அது மனைவியின் உறுப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

கர்ப்பப்பை தொற்றுநோய்

ஜோடிகள் தனிமையில் இருக்கும்போது, எப்போதும் உறுப்பில் தொடர்ந்து வலித்துக்கொண்டு இருந்தால், அது கர்ப்பப்பை தொற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்வது சிறந்தது.