நம்முடைய முன்னோர்கள் உணவு உண்பதையே ஒரு மருந்து கலாச்சாரமாக பார்த்தனர். இன்று உலகம் பாஸ்ட்புட், எண்ணெய், செயற்கை ரசாயனங்கள் நோக்கி சென்றாலும், பாரம்பரிய உணவுகளில் இயற்கையாகவே பலவிதமான உடல்நல நன்மைகள் இருக்கின்றன.
இன்றும் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ முறைகள் உணவையே மருந்தாக பயன்படுத்துகிறதே இதற்கே சான்றாகும்.
கீரைகள் – இயற்கை ரத்தம் பெருக்கும் மருந்துகள்
- தூதுவளை கீரை – இருமல், சளிக்கு அருமையான தீர்வு
- அகத்தி கீரை – மன அழுத்தம், சோர்வை குறைக்கும்
- கரிசலாங்கண்ணி – கண்களின் பார்வையை மேம்படுத்தும்
- சிறுகீரை – கண் புகைச்சலை சரிசெய்கிறது
- புதினா – பசியை தூண்டும், செரிமானத்துக்கு உதவும்
- கீழாநெல்லி – மஞ்சள் காமாலை சிகிச்சையில் பயன்படும்
பால் மற்றும் பால் பொருட்கள்
- பசும்பால் – ஆண்மை மற்றும் தாதுக்களை வளர்க்கும்
- ஆட்டின் பால் – ரத்தப்போக்கு சிகிச்சைக்கு பயனாகிறது
- மோர் – மூலநோயை குணமாக்கும்
- நெய் – ஞாபக சக்தியை அதிகரிக்கும்
- தேன் – கண்களுக்கு நன்மை தரும்
நீர் மற்றும் தரமான தானியங்கள்
- கொதித்த நீர் – சிறந்த சுத்திகரிக்கப்பட்ட நீர்
- புழுங்கல் அரிசி – குழந்தைகள் மற்றும் வாத நோயாளிகளுக்கு சிறந்தது
- அவல் – உடல் பலத்தை அதிகரிக்கும்
- கோதுமை – ஆண்மையை ஊக்குவிக்கும்
உளுந்து, பயறு வகைகள்
- உளுந்து – ஆண்மை மற்றும் பெண்களுக்கு இடுப்பு வலிமை
- பாசிப்பயறு – நோயாளிகளுக்கு ஏற்றது
- வேர்க்கடலை + வெல்லம் – உடல் வளர்ச்சி மற்றும் ஆண்மை
- பாதாம் – உடலுக்கு புஷ்டி தரும்
- சீதக்காய் – சர்க்கரை நோய்க்கு சிறந்தது
- எள் – எலும்புக்கு வலிமை, கூந்தலுக்கு சீராக்கம்
கிழங்கு, காய் வகைகள்
- சேனைக்கிழங்கு – ரத்தமில்லா மூலம் குணமாகும்
- இஞ்சி – வயிற்றை சுத்தம் செய்யும்
- கோவைக்காய் – வாய்ப்புண்களுக்கு
- மணத்தக்காளி கீரை – வயிற்றுப் புண் குணமாகும்
- தேங்காய் – தோல் நோய்களுக்கு நல்லது
- வாழைப்பூ – ரத்த மூலம் சிகிச்சைக்கு சிறந்தது
- வெள்ளரிப்பிஞ்சு – உடலுக்கு குளிர்ச்சி தரும்
நம் பாரம்பரிய உணவுகளை மீண்டும் வாழ்வில் கொண்டு வந்தால், மருத்துவமனைக்குச் செல்லும் தேவை குறையும் என்பது உறுதி. “உணவே மருந்தாக இருந்த காலம்” மீண்டும் நம் சமையலறையில் பிறக்கட்டும்.