திருப்பதியில் வெள்ளம்: பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

திருப்பதியில் கனமழை பெய்து வருவதால் திருப்பதி நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். திருப்பதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது.

tamil news

இதனால் திருப்பதி மலைப்பாதைகள் நேற்று முதல் அடைக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக மலைப்பாதையில் சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Advertisement