செமஸ்டர் தேர்வு எப்போது? – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

‘ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும்’ என வலியுறுத்தி ஈரோடு, மதுரை என பல இடங்களில் மாணவர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில் “11 அமைப்புகளை சேர்ந்த மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தோம்.” அதில் பலரும் “ஆன்லைன் தேர்வு வேண்டாம்; நேரடி தேர்வுக்கு கால அவகாசம் கோரியுள்ளனர். அதிகபட்சமாக 1 மாதம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கூடுதலாக அளித்து, அந்த கோரிக்கையை ஏற்கிறோம். அதன்படி, நவம்பரிலிருந்து 2 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன்படி, ஜனவரி 20ம் தேதிக்குப் பின் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும்” என்றார்.