கோவையில் பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணி ஆதரவாளர்கள் கைது

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே பெரியார் படிப்பகத்தில் திராவிட கழகத்திற்கு சொந்தமான பெரியார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு விஷமிகள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும் காவி சாயம் பூசியும் அவமரியாதை செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பெரியார் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெரியார் சிலையை தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் பெரியார் சிலையை அவமதித்த இந்து முன்னணி ஆதரவாளர்கள் அருண் கார்த்திக் அவனுடைய கூட்டாளி மோகன்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement