முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார்.

கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.

வாஜ்பாயி திருமணம் செய்து கொள்ளவில்லை, அவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார்.

இரண்டு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர்.

இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டபின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் பல கோணங்களில் முன்னேறியது.

இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருது 27 மார்ச் 2015 அன்று வழங்கப்பட்டது.

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று போராடிய காரணத்திற்க்காக 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐ.நாவில் ஹிந்தியில் பேசிய முதல் நபர் வாஜ்பாய்.

1979ல் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த பிறகு ஜனதா கட்சி உடைந்தது.

1980ல் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினார் வாஜ்பாய். அந்த கட்சியின் முதல் தலைவரும் வாஜ்பாய்தான்.

இந்திரா காந்தி ஆட்சியை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டார் வாஜ்பாய்.

1996ல் பாஜக வெற்றிபெற்று பிரதமரானார் வாஜ்பாய்.

அதன் பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக வாபஸ் பெற்றதால் ஆட்சியை இழந்தார் வாஜ்பாய்.

1998ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார்.

2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்தை வாஜ்பாய் கடுமையாக எதிர்த்தார். அப்போது குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தூக்கி விடலாம் என முடிவு செய்ததாகவும் அதை அத்வானி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மிக குறுகிய காலமே ஆட்சி செய்தாலும் இவரது ஆட்சியில் நாட்டின்  பல துறைகள் முன்னேறியது.