Search
Search

உங்கள் பணியில் நீங்கள் சிறப்பானவராக எப்படி மாற முடியும்..? எளிமையான 3 டிப்ஸ்..!

உங்கள் பணியில் நீங்கள் சிறப்பானவராக மாறுவதற்கு தேவையான 3 டிப்ஸ்களை நாம் பார்க்கலாம்.

பணியில் சிறப்பான நபராக இருப்பதற்கு 3 டிப்ஸ்:-

பாராட்டுகளை சேமித்து வையுங்கள்:

நீங்கள் எந்த பணியில் இருந்தாலும், அதன் உயர் அதிகாரிகள் அல்லது சக பணியாளர்கள் உங்களை பாராட்டியிருப்பார்கள். பலமுறை இல்லையென்றாலும், ஏதேனும் ஒரு முறை பாராட்டியிருப்பார்கள். அந்த பாராட்டுகள் அனைத்தையும், ஒரு போல்டரில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டிற்கு, உங்கள் பணி சிறப்பாக உள்ளது என்று சக பணியாளர், வாழ்த்துகளை வாட்ஸ் அப்பில் மெசேஜாக அனுப்பியிருந்தால், அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது, நீங்கள் அந்த ஸ்கீரின் ஷாட்டை பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.

மேலும், உங்களை யாராவது விமர்சனம் செய்யும் போது, அந்த பதிவை பார்த்தால், நீங்கள் நல்ல வேலைக்காரன் தான். இந்த முறை தான் தவறு நடந்துவிட்டது என்று அறிவுரை புகட்டுவதாக இருக்கும்.

விமர்சனத்தை எதிர்பார்க்காதீர்கள்:

ஒரு சிலர் தாங்கள் செய்த பணியை மற்றவர்களிடம் காட்டி, அது எவ்வாறு இருக்கிறது என்று கேட்டுக் கொண்டு இருப்பார்கள். அதன்மூலம், அவர்கள் கூறும் தவறுகளை திருத்திக் கொண்டு, அதனை சரி செய்ய முயற்சி செய்வார்கள். ஆனால், உண்மையில், இவ்வாறு செய்துக் கொண்டே இருப்பதன் மூலம், ஒரு கட்டத்தில் நம் அலுப்படைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது ஒரு வகையில், சரியான விஷயம் என்று சிலர் கூறினாலும், அது இருபுறமும் கூர்மையான ஆயுதம் என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் செய்த பணியில் என்ன தவறு உள்ளது என்று நீங்கள் செல்ஃப் வேல்யூவேஷன் பண்ணுங்க.

சிரித்த முகத்தோடு இருங்கள்:

வேலை செய்யும் இடங்களில் நமக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய குணாதிசயம். எப்போதும், சிரித்த முகத்துடன் இருப்பது. இது உங்கள் மீது நேர்மறையான எண்ணத்தை உருவாக்கி, நட்பு வட்டத்தை பெரிதாக்கும். பணியிடங்களில் நேர்மறையான சூழல் உருவாக்கிக்கொடுக்கும். உங்களை அறியாமலேயே உங்களின் பணி சிறப்பாக இருக்கும்.

Leave a Reply

You May Also Like