Search
Search

கடல் பற்றி சில தகவல்கள்

kadal water

நமது புவியை நீர்க்கோளம் என்று சொல்லுவதுண்டு. ஏனெனில் புவியின் பரப்பில் முக்கால் பங்கிற்கு மேல் நீரே சூழ்ந்துள்ளது. புவியிலுள்ள மொத்த நீரில் 35 சதவிகிதத்திற்கு கடல் நீரே உள்ளது. இந்த கடல் நீரின் மொத்த அளவு 130 க. கோடி கன கிலோ மீட்டர்கள்.

ஒரு கன கிலோ மீட்டர் என்றால் ஒரு கிலோ மீட்டர் உயரம், ஒரு கிலோ மீட்டர் உயரம், ஒரு கிலோ மீட்டர் நீளம், ஒரு கிலோ மீட்டர் அகலம் உள்ள பரப்பின் கொள்ளளவு ஆகும்.

ஒரு கன கிலோ மீட்டர் கொள்ளளவில் சுமார் 94330 லிட்டர் தண்ணீர் கொள்ளும். அதன்படி 130 கோடி முதல் 126 கோடி கன கோடி கிலேமீட்டர் பரப்பில் 122629,000000000 முதல் 124345,500000000 லிட்டர் கடல் நீர் உள்ளது.

கடல் மட்டத்திற்கு மேலுள்ள நிலப்பரப்பின் கொள்ளளவு இதில் 18ல் ஒரு பங்குதான். நமது புவி ஒழுங்கான வட்ட வடிவம் கொண்டாதாக இருத்தால் அதலே 3600 மீட்டர் ஆழம் வரை கடல் நீர் நிரம்பி விடும்.

இதைப் பார்க்கும் போது ‘தண்ணீர்! தண்ணீர்! நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நியைந்திருக்கும்! தண்ணீர்!’ என்றே ஒரு தளபதி தனது படையெடுப்பின் போது கூறிய வார்த்தைகள்தான் நம்முன் நிழலாடும்.

கடலின் தனிப்பரப்பு நிலத்தின் தனிப்பரப்பு போலவே அமைந்துள்ளது. இங்கும் கணவாய்ப் பள்ளத்தாக்கு, பீடபூமி, சமவெளி மலைகள் அமைந்தள்ளன. கடலின் படுக்கையை ஆறு பிரிவாகப் பிரிக்கலாம்.

kadal water

கரையோரமாக உள்ள மணல் திட்டுக்கள் – இது கடலலைகள் கரையை அரித்து மணலைக் கொண்டு வந்து சேர்ப்பதனால் ஏற்படுவது இதற்கு அடுத்து படிப்படியாக சரிவாக இறங்கிக் கொண்டு வரும் மணல் திட்டுக்கள் கரைப் பகுதியை ஒட்டி அமைந்தள்ள பகுதி. பொதுவாக இதன் ஆழம் 150 மீட்டர் வரை இருக்கும். சில இடங்களில் 320 கிலோ மீட்டர் அகலம் வரை உள்ளது.

கடல் அலைகள் என்னென்ன காரணங்களால் எழுகின்றன?

காற்றின் அசைவுகளாலும் சூரியன், சந்திரன் இவைகளின் ஈர்ப்புத் திறனாலும், பூமியின் அதிர்வு காரணமாகவும் கடலில் அலைகள் எழும்புகிறது.

கடலின் அடியில் எரிமலைகள் வெடிப்பதாலும் கடல் கொந்தளிப்புடன் உயர்ந்த அலைகள் உருவாகின்றன.

புயல்காற்று கடலில் மிக உயரமான அலைகளைத் தோற்றுவிக்கும். சில சமயங்களில் பனைமர உயரத்திற்குக் கூட கடலில் அலைகள் உயர்ந்து மிகுந்த சேதங்களை விளைவிக்கும்.

அமாவாசை மற்றும் பௌர்னமி அன்று அதிக அலைகள் ஏன்?

ஓவ்வொரு அமாவாசை அன்றும், பௌர்னமி அன்றும் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்முகமாக இருக்கும். அதனால் சூரியனின் ஈர்ப்புச் சக்தியும், சந்திரனின் ஈர்ப்புச் சக்தியும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் அதனால் அந்த திணங்களில் மட்டும் அலைகள் உயரம் வழக்கத்தை விட சீற்றத்துடன் இருக்கும்.

Leave a Reply

You May Also Like