Search
Search

Lockdown-க்கு பிறகு Gym-க்கு போறிங்களா? – இந்த 6 விஷயங்களை படிச்சுட்டு போங்க…

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்துவிதமான கடைகள் அடைக்கப்பட்டு தற்போது ஒவ்வொன்றாக திறக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் உடற்பயிற்சி கூடத்தையும் திறக்க விரைவில் அனுமதிக்கப்படும்.

Gym பாதுகாப்பனாதா? ஏனென்றால், அனைவரும் ஒரே கருவியை, ஒரே இருக்கையைத்தான் பயன்படுத்துவோம், அதனால் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு இங்கு உள்ளது. இருந்தாலும், சிலருக்கோ gym போகாமல் இருக்க முடியாது. அவ்வாறு உள்ளவர்கள் gym செல்வதற்கு முன், இந்த 6 விஷயங்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

6 அடி இடைவேளை

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் இயந்திரத்தில் இருந்து மற்றவர்கள் குறைந்தது 6 அடி இடைவேளை விட்டு நிற்கும் அளவிற்கு இடம் இருக்கிறதா என உங்கள் gym மாஸ்டரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

பாதுகாப்பு

வரும் அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் சானிடைசர், கை கழுவுதற்கு இடம், உடற்பயிற்சி பொருட்களின் அடிக்கடி துடைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமா என உறுதிப்படுத்தி கொள்ளவும்.

உடற்பயிற்சி பொருட்களின் சுத்தம்

உடற்பயிற்சி சாதனங்களை தினம் தினம் கட்டாயமாக முன்பை விட சற்று அதிகமாக சுத்தம் செய்ய வேண்டும். கண்டிப்பாக அனைவரும் ஒரே சாதனைத்ததான் பயன்படுத்த வேண்டும், மேலும், கை மற்றும் கால் படும் இடங்களை சற்று அதிக கவனம் எடுத்து பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், இந்த பகுதி மூலம் வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.

உடல் வெப்ப சோதனை

அரசு அறிவுரையின்படி ஒருவர் உள்ளே நுழைவதற்கு முன் அவர்களது உடல் வெப்பத்தை சோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். அதேபோல் gym நிறுவனம் சோதனை செய்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.

தனிப்பட்ட தற்காப்பு முறைகள்

என்னதான், gym நிறுவனம் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், நீங்களும் சிலவற்றை செய்தாக வேண்டும்.

  • வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.
  • உங்களுக்கு என்று தனியாக தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும், பொது இடத்தில் உள்ள தண்ணீர் பிடிக்கும் இடத்தினை தவிர்ப்பது நல்லது.
  • உங்களுக்கு என்று தனியாக ஒரு துண்டினை கொண்டு செல்வது நல்லது. உடற்பயிற்சி செய்யும் போது துண்டினை இருக்கையில் வைத்துக் கொண்டால் அடுத்தவர்கள் வியர்வை உங்கள் மேல் படுவது குறையும்.
  • உடற்பயிற்சி முடிந்த பிறகு கண் மற்றும் வாய் போன்ற பகுதிகளை தொடுவதை தவிர்க்கவும்
  • உடற்பயிற்சி முடிந்தவுடன் உடற்பயிற்சி சாதனைங்களை சுத்தப்படுத்தவும்.
  • இந்த சமயத்தில், கடுமையான உடற்பயிற்சியில் மாஸ்க் அணிந்து கொண்டு ஈடுபட வேண்டாம். ஏனென்றால் மாஸ்க் அணிவதால் முழுமையான சுவாசம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு.
  • உடற்பயிற்சி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து துண்டை துவைத்து விட வேண்டும். குளித்த பிறகே விட்டில் மற்ற இடத்திற்கு செல்ல வேண்டும்.

Leave a Reply

You May Also Like