எவ்வளவு குளித்தாலும் வியர்வை நாற்றம் வருகிறதா..? இது உங்களுக்கான டிப்ஸ்..!

எவ்வளவு தான் சோப்பு போட்டு மனக்க மனக்க குளித்தாலும், அவர்கள் மீது வியர்வை நாற்றம் வந்துக் கொண்டு தான் இருக்கும். இதுபோன்ற பிரச்சனைகளால், பொதுஇடங்களில் அவர்களால் சகஜமாக பழக முடியாது. இந்த பிரச்சனைக் கொண்டவர்களுக்கான இயற்கை வைத்தியம் என்ன உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

  1. க்ரீன் டீ
  2. தக்காளி சாறு
  3. கல் உப்பு
  4. சோம்பு
  5. வேப்பிலை

க்ரீன் டீ:

க்ரீன் டீ என்பது உடலில் கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த பொருளை உடலில் உள்ள துர்நாற்றத்தை போக்குவதற்கும் பயன்படுத்த முடியும். அதாவது, க்ரீன் டீ பைகளை தண்ணீரில் நனைத்துவிட்டு, அதனை அக்குள் பகுதியில் தேய்த்துவிட்டால், சிறிது நேரத்திற்கு பிறகு, கழுவிவிட்டால், அப்பகுதியில் உள்ள துர்நாற்றம் நீங்கி விடும்.

Advertisement

தக்காளி சாறு:

எபில் என்ற ஹார்மோன் அதிகமாக சுரப்பதே உடலில் வியர்வை அதிகமாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம். இந்த சுரப்பியை தக்காளியின் சாறு கட்டுப்படுத்திவிடும் என்று சொல்லப்படுகிறது. அதனால், வியர்வை அதிகமாக ஏற்படும் அக்குள் பகுதியில், தோய்த்து வந்தால், துர்நாற்றம் வராது.

கல் உப்பு :

கல் உப்பு என்பது வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள். அனைவரது வீட்டு சமையல் அறையிலும், இந்த பொருள் நிச்சயமாக இருக்கக்கூடிய ஒன்று. இதில் உள்ள மூலக்கூறுகள் கிருமி நாசினியாக பயன்படக்கூடியவை. எனவே, இதனையும், துர்நாற்றம் நீக்கியாக பயன்படுத்த முடியும். அதாவது, கல் உப்பை, வழக்கம் போல், அக்குள் பகுதியில் தேய்த்து வந்தால், துர்நாற்றம் நீங்கிவிடும்.

சோம்பு :

சோம்பு லாக்ஸேட்டிவ் பண்புகளை உள்ளடக்கியது. இது செரிமாணத்திற்கான கெமிக்கல்களை உருவாக்கும். எனவே உணவின் மூலம் வரும் உடல் துர்நாற்றத்திற்கும் சோம்பு சமையலில் பயன்படுத்த சரியாகும்.

வேப்பிலை :

வேப்பிலையில் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் பண்பும், ஆண்டிசிபேடிக் பன்புகளும் அதிகமாக இருப்பதால் வேப்பிலையை அரைத்து அக்குளில் தடவி ஊற வைத்து பின் கழுவ கிருமிகள் அகலும். துர்நாற்றமும் இருக்காது.