60 வயதிலும் மாஸ் காட்ட வேண்டுமா..? இது உங்களுக்கான பதிவு..!

முன்னுரை:-

60 வயதிலும் ஹீரோக்கள் மாதிரி செம மாஸாக, அதாவது வலுவான ஊட்டச்சத்தோடு இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த கட்டூரையில் பார்க்கலாம்.

விளக்கம்:-

இப்போதைய உணவுப்பொருட்கள் சரியாக இல்லாத காரணத்தால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகி, 50 வயதிலேயே பலரும் உயிரிழந்து வரும் சூழ்நிலை இப்போது இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்தால், அனைவரும் தங்களது 30-வயதில் இருந்து சில பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அந்த பழக்கங்கள்:-

1. உடற்பயிற்சி

2. மனஅழுத்தம்

3. மருத்துவர்

4. உடல் எடை

உடற்பயிற்சி:-

உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், அதனை சரியான முறையில் தொடருங்கள். அப்படி இல்லையென்றால், இனிமேலாவது தொடருங்கள். இவ்வாறு உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை, 30 வயதில் இருந்தாவது தொடங்குங்கள்.

மனஅழுத்தம்:-

பெரும்பாலும் மனஅழுத்தம் காரணமாகவே நமக்கு அதிகப்படியான நோய்கள் வரும் அபாயம் இருக்கிறது. எனவே அவற்றை தடுத்து விடுங்கள். முதுமையில் வரும் 77 சதவீத நோய்களுக்கு மனஅழுத்தமே காரணம்.

மருத்துவர்:-

உங்கள் உடலுக்கு ஏற்றவாறு உள்ள மருத்துவரை, அதாவது, உங்கள் உடல் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்ட மருத்துவர் யார் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு 30 வயதில் இருந்தே தேவைப்படும். அப்போது தான் நோய் வருமுன்னே அவர் சரி செய்ய ஏதுவாக இருக்கும்.

உடல் எடை:-

உடல் எடை அதிகமாக உள்ளது ஆரோக்கியமற்ற ஒன்றாகும். சரியான அளவு, சரியான உணவு என்ற தாரக மந்திரத்தை முழு மூச்சாக பயன்படுத்துங்கள்.

Recent Post