முகத்தை பளபளப்பாக்கும் தேன்..! சில டிப்ஸ்..!

முன்னுரை:-

தேன் மற்றும் கூடுதலாக சில பொருட்களை பயன்படுத்தி எப்படி முகத்தை பளப்பளப்பாக மாற்றுவது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

விளக்கம்:-

சர்க்கரையில் உள்ள கொட்ட விஷயங்களின் காரணமாக, பலரும் தங்களது உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பழக்கத்தின் காரணமாக, பலரது வீட்டிலும் தேன் இருந்து வருகிறது. இந்த தேனை வைத்து முகத்தை எப்படி பளப்பாக்கலாம். அதற்கு கூடுதலாக சில பொருட்கள் தேவை.

அந்த கூடுதல் பொருட்கள் பின்வருமாறு:-

எலுமிச்சைப்பழம்

பட்டை

தக்காளி

எலுமிச்சைப்பழம்:-

சரும பராமரிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் என்றால் அது எலுமிச்சைப்பழம் தான். இந்நிலையில், இந்த பழத்தை தேனுடன் சேர்த்தால் பலவகை நன்மைகள் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் தடவி விடுங்கள். கொஞ்ச நேரம் காய வையுங்கள். பிறகு, முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி விடுங்கள். இதே போல் செய்தால் முகம் பளப்பளப்பாகும்.

பட்டை:-

பட்டையை பொடிபொடியாக்கி, அதோடு தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். பேஸ்ட் மாதிரி ஆகும் வரை கலக்குங்கள். பிறகு முகத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்தால், முகம் பளப்பளப்பாகுதோடு, முகப்பருவும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

தக்காளி:-

தக்காளி சதை மற்றும் தேனை ஒன்றாக சேர்த்து கலக்கி;க்கொள்ளுங்கள். பிறகு அதனை முகத்தில் தடவுங்கள். 15 நிமிடத்திற்கு பிறகு, அதனை கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தாலும் முகம் பளப்பளப்பாக வாய்ப்பு இருக்கிறது.

முகப்பரு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

முகப்பரு என்பது டீன் ஏஜ் பருவத்தை எட்டும்போது, அனைத்து பெண்களுக்கும் வரக்கூடிய விஷயம் தான். ஆனால், இதனை பலரும் பெரியதாக நினைத்துக்கொள்கின்றனர். அது ஒரு சாதாரண விஷயம் என்பதை பெற்றோர்கள் தான் புரிய வைக்க வேண்டும். சரி தற்போது பரு வந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

செய்யக்கூடாதவை..? செய்ய வேண்டியவை..?

1. முகப்பரு வந்தால் நாம் முதலில் செய்யக் கூடாத ஒரு விஷயம் என்னவென்றால், கிள்ளிவிடுவது. முகப்பருவவை கிள்ளவே கூடாது. அப்படி செய்யும்போது, அது அருகருகே பரவும் ஆபத்து இருக்கிறது.

2. டவல் வைத்து அழுத்தவும் கூடாது.

3. அதிக காரம் மற்றும் அமிலத் தன்மைக்கொண்ட சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.

4. சோப்பிற்கு பதிலாக பேஷ்வாஷ் பயன்படுத்துவது சிறந்தது. பேஷ்வாஷ் போட்டுவிட்டு, இதமான சுடுநீரில் கழுவினால் போதுமானது.

5. குறிப்பிட்ட வயதைக் கடந்ததும், வந்த பரு அடையாளம் தெரியாமல் போய்விடும். அதையும் போகாமல் இருந்தால் மட்டும் மருத்துவரை அனுகவும்.