இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு உடல் எடையை அதிகரிப்பதும் குறைப்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான உரிய பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக சாப்பிடுவதே முக்கிய காரணம் என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் நம் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நம் சாப்பிடும் உணவில் இருக்கும் கலோரிகளின் அளவை பொறுத்தது.
கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும். அப்படின்னா ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா. அதுக்குத் தாங்க ஒரு பார்முலா இருக்கு.
அந்த பார்முலா பற்றி தற்போது இன்னும் விளக்கமா பார்க்கலாம்..
உடற்பயிற்சி செய்பவர்களை 5 வகையாக பிரிக்கலாம்..
உடற்பயிற்சி செய்யாதவர்கள்.
வாரத்திற்கு 1 லிருந்து 3 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர்கள்.
வாரத்திற்கு 4 லிருந்து 5 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்பவர்கள்.
வாரத்திற்கு 6 லிருந்து 7 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்பவர்கள்.
வாரத்திற்கு 7 நாட்களும், இரண்டு வேலைகளும் உடற்பயிற்சி செய்வார்கள்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட மதிப்பு கொடுக்கப்படுகிறது. அதன் படி,
முதல் நிலையை சேர்ந்தவர்கள் 1.2 மதிப்புகள்
2-ஆம் நிலையை சேர்ந்தவர்கள் 1.3 மதிப்புகள்
3-ஆம் நிலையை சேர்ந்தவர்கள் 1.5 மதிப்புகள்
4-ஆம் நிலையை சேர்ந்தவர்கள் 1.7 மதிப்புகள்
5-ஆம் நிலையை சேர்ந்தவர்கள் 1.9 மதிப்புகள்
தற்போது பார்முலாவுக்குள்ள வரலாம்..
உங்கள் எடையை 2.2 என்ற எண்ணுடன் பெருக்க வேண்டும். அதன் பெருக்குத் தொகையை எண் பத்தோடு சேர்த்து பெருக்க வேண்டும். அந்த பெருக்குத் தொகையை இந்த 5 நிலைகளில் நீங்கள் எந்த பிரிவில் வருகிறீர்களோ அதற்கான மதிப்போடு சேர்த்து பெருக்கவும்.
எடுத்துக்காட்டுக்கு..
ஒரு நபரின் எடை 85 கிலோ. அவர் ஒரு வாரத்திற்கு 1 லிருந்து 3 நாட்கள் உடற்பயிற்சி செய்பவர். அவருக்கு ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளின் எண்ணிக்கை குறித்து தற்போது பார்ப்போம்.
85 * 2.2 – 187
187 * 10 – 1870
1870 * 1.3 – 2431
அப்படியானால் 85 கிலோ எடையுள்ள, வாரத்திற்கு 1 லிருந்து 3 நாட்கள் உடற்பயிற்சி செய்பவருக்கு ஒரு நாளைக்கு 2431 கலோரிகள் தேவை.
இந்த அளவுக்கு கலோரிகளை ஒரு நாளைக்கு நீங்கள் எடுத்துக்கொண்டால் உடல் எடை சீராக அப்படியே இருக்கும். இதற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். இதற்கு குறைவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும்.
இவ்வாறு நம் சாப்பிடும் உணவுகளை சரியான வழிக்காட்டுதலின் படி எடுத்துக்கொண்டால், நோயற்ற வாழ்வை வாழ முடியும்..