உங்களுடைய ஆதார் நம்பர் தவறாக பயன்படுத்தப்படுகிறதா.. எப்படி கண்டுபிடிப்பது?

ஆதார் அட்டை இந்தியாவில் இன்று மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். வங்கிகள், வருமான வரி தாக்கல், மானிய சலுகைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற முக்கியமான இடங்களில் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட முக்கியமான ஆவணம் தவறாக பயன்படுத்தப்படுகின்றதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அனைவரின் கடமை. அதை எப்படி செய்யலாம் வாருங்கள் பார்ப்போம்.
அரசின் UIDAI இணையத்தின் பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் ‘என் ஆதார்’ என்பதை கிளிக் செய்து அதில் ‘ஆதார் சேவைகள்’ என்பதை கிளிக் செய்யவும். பிறகு ‘ஆதார் அங்கீகார வரலாறு’ என்பதை கிளிக் செய்யவும்.

அது இன்னொரு பக்கத்தில் செல்லும்போது, அங்கு உங்களது 12 இலக்க ஆதார் நம்பரை கொடுத்து கொள்ளுங்கள்.

அதில் நீங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தி இருக்கீர்கள் என விவரங்கள் இருக்கும். அதனை பார்த்து உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம். இதனை ஆறு மாதங்களுக்கு மட்டுமே பார்க்கமுடியும் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பார்த்துக் கொள்வது நல்லது.