வாய் புண் சரியாக என்ன செய்ய வேண்டும்..? இதோ சில டிப்ஸ்..!

முன்னுரை:-

வாய் புண் சரியாகுவதற்கு தேவையான சில டிப்ஸ்கள் பற்றி தெளிவாகவும், நம்பத்தகுந்ததாகவும் நாம் பார்க்கலாம்.

விளக்கம்:-

சிறிய பிரச்சனை தான் வாய் புண். ஆனால், அது வந்துவிட்டால், ஒவ்வொரு நொடியும் உதட்டில் கத்தியால் குத்துவது போன்று வலித்துக்கொண்டே இருக்கும். இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.

காரணங்கள்:-

பல் துளக்கும் பிரஷ் சரியாக இல்லாமல் இருத்தல், மனஅழுத்தம், சரியான தூக்கம் இல்லாமல் இருத்தல், பல் ஈறுகளில் இருக்கும் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாய்புண் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

தீர்க்கும் வழிகள்:-

  1. தேங்காய் எண்ணெய்
  2. தேன்
  3. உப்புத் தண்ணீர்

தேங்காய் எண்ணெய்:-

எல்லோருடைய வீட்டிலும் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய பொருட்களில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய். இந்த எண்ணெய் வலி நிவாரணயாக பயன்படுவதால், இதனை புண் உள்ள இடத்தில் தடவி விடுங்கள். வலி குறையும். இதனால் புண் விரைவில் ஆறும்.

தேன்:-

தேன் மற்றும் மஞ்சளில் அதிகமாக ஆண்டி பயாடிக்ஸ் இருப்பதால், அதனை புன் உள்ள இடத்தில் தடவி விடுங்கள். இதன்மூலம் புன் விரைவில் ஆறும்.

உப்பு தண்ணீர்:-

உப்பு தண்ணீர் மூல நோயின் வலியையே விரைவில் குறைக்கும் என்று கூறுவார்கள். அதேபோல வாய் புண்ணையும் இந்த உப்பு தண்ணீர் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் கல் உப்பை போடுங்கள். பிறகு அந்த தண்ணீரை வைத்து வாய் கொப்பழியுங்கள். இதேபோன்று தொடர்ந்து செய்தாலும், வாய் புண் விரைவில் ஆறும்.

Recent Post