Search
Search

பாடல் பாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யனும்..! ஏன் தெரியுமா..?

முன்னுரை:-

தீவிரமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், யார் யார் எவ்வளவு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் இந்த கட்டூரையில் பார்க்கலாம்.

விளக்கம்:-

உடற்பயிற்சி என்பது அனைவரது வாழ்க்கையிலும் எதார்த்தமாக நடக்க வேண்டிய விஷயம். ஆனால், பலரும் நவீன வாழ்க்கை முறையில் மூழ்கிவிட்டதால் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடிவதில்லை.

இருப்பினும், சிலர் ஆங்காங்கே உடற்பயிற்சிகளை செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதில், ஒரு சிலர் சற்று அதிகமாகவே செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இப்படி செய்வதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவர்களுக்கான சில முக்கிய தகவல்களை தற்போது பார்க்கலாம்.

தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்:-

1. உடற்பயிற்சியை ஒரு நாளைக்கு 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை தான் மேற்கொள்ள வேண்டும். அதே போல் வாரத்தில் 3 லிருந்து 5 நாட்கள் மட்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்வது வீண் தான் என்று உடற்பயிற்சியாளர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர். சில பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

2. உடற்பயிற்சியை மேற்கொள்ளும்போது, பாடல் பாடிக்கொண்டே உடற்பயிற்சியை செய்ய வேண்டும். உங்களால் பாடல் பாட முடியாத அளவிற்கு, தீவிரமாக உடற்பயிற்சி செய்தால், அதனை உடனே நிறுத்திவிடுங்கள்.

3. தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டால், சில சமயங்களில் இதயம் நின்றுவிடும் அளவிற்கு ஆபத்துகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

4. உடற்பயிற்சியை புதியதாக செய்ய விரும்புபவர்கள், எடுத்த உடனேயே பெரிய அளவில் செய்யக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் தீவிரமாக செய்ய வேண்டும்.

5. ஜலதோசம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், 10 நாட்களுக்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது சிறந்தது.

Leave a Reply

You May Also Like