எந்த மாதிரியான நண்பர்களிடம் விலகி இருக்க வேண்டும்..!

முன்னுரை:-

எந்த மாதிரியான நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், அவர்களை எப்படி அடையாளம் காண்பது பற்றியும் இந்த சிறப்புத் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

விளக்கம்:-

Advertisement

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நண்பர்களின் துணை முக்கியமாக தேவை. ஆனால், சில சமயங்களில் குறிப்பிட்ட சில நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பதே சால சிறந்தததாகும்.

அப்படிப்பட்ட சில நண்பர்கள் பின்வருமாறு:-

  1. நடிப்பு அரக்கர்கள்

2.விமர்சக புலிகள்

3. பிரச்சனைகளை மறக்கத் தெரியாதவர்கள்

நடிப்பு அரக்கர்கள்:-

நடிப்பில் வெறித்தனமானவர்களாக இருப்பார்கள். காரியம் சாதிக்க வேண்டும் என்றால், எப்படி வேண்டுமானலும் மாறக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் சுயநலத்தால், கூட இருப்பவர்களுக்கு தான் பிரச்சனைகள் விரைவில் ஏற்படும். தங்களது பிரச்சனைகள் தான் உலகிலேயே பெரியது என்று கூறிக்கொள்ளும் இவர்கள், மற்றவர்கள் பிரச்சனையை ஒரு சிறிய துரும்பைப் போல கூட நினைக்க மாட்டார்கள்.

விமர்சன புலிகள்:-

வைத்துக்கொள்ள கூடாத நண்பர்களில் இவர்கள் தான் மிகவும் முக்கியமானவர்கள். இந்த மாதிரியான நண்பர்கள், நீங்கள் எது செய்தாலும், அதனை குறைக் கூறிக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களுக்கு குறை கூறுவது மட்டுமே தெரியும். அதற்கான சரியான வழியையும் உங்களுக்கு தர மாட்டார்கள். எப்போது எதிர்மறையான விஷங்களையே பேசும் இவர்களால், உங்களுடைய நலன் தான் வீணாகிப்போகும் என்பது உறுதி.

மணக்கசப்பு கொண்டவர்கள்:-

இவர்களோடு இருக்கும்போது, தேவையற்ற சண்டைகளும், எப்போதும் பிரச்சனைகளுமாகவே இருக்கும். இவர்கள் தாம் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதனை மறக்கவே மாட்டார்கள்.

எப்போதும் அதனை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்வார்கள். சீக்கிரத்தில் சமாதானமாக மாட்டார்கள். இவர்கள் பிரச்சனைகளை தவிர்க்க முனையாமல், அதனை வளர்க்கவே பிரியப்படுவார்கள்.