முன்னுரை:-
பெண்களின் மார்பகத்தை பாதுகாப்பதற்கு முக்கியமான வழிகள் பற்றியும், மார்பக புற்றுநோயி;ல் இருந்து தப்பிக்கும் வழிகள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
விளக்கம்:-
பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் முதன்மையானது மார்பக புற்றுநோய் தான் ஆகும். இந்த நோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.
வழிகள்:-
- உடல் எடை
- உடற்பயிற்சி
- தீயப்பழக்கம்
- உணவு
- தாய்ப்பால்
உடல் எடை:-
அதிகப்படியான உடல் எடை கொண்டவர்களுக்கு தான் அதிகமாக புற்றுநோய் தாக்கப்படுகிறது. எனவே, பெண்கள் தங்களது உடல் எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்பட உதவும்.
உடற்பயிற்சி:-
உடற்பயிற்சி என்பது வாழ்வின் அடிப்படையான பழக்கம் ஆகும். இதனை மறக்கும் போது, சில உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும். எனவே பெண்கள் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய பழகிக்கொள்ளுங்கள்.
தீயப்பழக்கம்:-
மது குடித்தல், சிகரெட் போன்ற தீயப்பழக்கம் இருந்தால், அதனை இன்றே நிறுத்திவிடுங்கள். தீயப்பழக்கங்கள், புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.
உணவு:-
உணவு பழக்கங்களி;ல் கண்டிப்பாக மாற்றம் தேவை. பாஸ்ட் புட் போன்ற உணவு வகைகளை நிறுத்திவிட்டு, காய்கறி, நட்ஸ், முட்டை, கீரை வகைகளை உணவாக சாப்பிடுங்கள்.
தாய்ப்பால்:-
குறைந்தது 30 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே சிறந்தது. அதுமட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களாகவது தாய்ப்பாலை கொடுங்கள். இது புற்றுநோயின் பாதிப்பை தடுக்கும்.