Search
Search

மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் துன்பங்களை போக்குவது எப்படி?

மாதவிடாயின்போது சில பெண்கள் பொிதும் துன்புறுகிறாா்கள். அப்போது ஏற்படும் வலிக்கும் எாிச்சலுக்கும் உடனடி நிவாரணமாகக் கொத்து மல்லியை எடுத்து நன்றாகத் தூளாக்கி ஒரு டம்ளர் தண்ணீாில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அரை டம்ளா் அளவாக வற்ற வைத்து ஓா் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஊற்றிக் குடித்துவிட வேண்டும். இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

செம்பருத்தி பூக்களை நெய்யில் வறுத்துச் சாப்பிட்டு வர அதிகப்படியான மாதவிடாய்ப் போக்கு குறைந்து சீரடையும். மாதவிலக்கை எளிதாக்கும் சிறப்புதன்மை செம்பருத்திப் பூவுக்கு உண்டு.

செம்பருத்தி வேரைப் பொடி செய்து அதனுடன் தாமரைக் கிழங்குப் பொடி, முள்ளிலவுப் பட்டைப் பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அவற்றை அரைடம்ளா் நீரில் கலந்து உட்கொள்ள பெரும்பாடு குணமாகும்.

சிலருக்கு மாதவிடாயினால் அதிக வயிற்று வலி இருக்கும், இதனை குறைக்க புதினாக் கீரையை இடித்து அரை டம்ளா் சாறு பருகவேண்டும்.  புதினா சாற்றினை விரும்பாதவா்கள், அதனை சட்னியாக அரைத்து சாப்பிட குணமாகும்.

அத்திப்பட்டையை சுத்தம் செய்து நன்றாக இடித்து, புதிய மண்சட்டியில் போட்டு அதில் 300 மில்லியளவு நீா் வைத்து அதனை பாதியாக சுண்டக் காய்ச்சி, வெங்காரத்தை பொாித்து தூள் செய்து அதனை காஷயத்தில் கலந்து காலை, பகல், மாலை மூன்று தினங்கள் சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.

அசோகமரத்தின் பட்டை, அருகம்புல், வாழை இலை இவை அனைத்திலும் ஒரு கைப்பிடி எடுத்து அதனை நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்துக் காலை, பகல், மாலை  மூன்று வேலையும் உட்கொள்ள பெரும்பாடு குணமாகும்.

மாதவிடாய் கடுமையான வலியினை கட்டுப்படுத்த, மூன்று நாட்களுக்கு முன் இரவு உணவுகளை தவிா்த்து விட்டு பசும் பாலும், வாழைப்பழமும் உண்டு வரலாம். வாழைப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடலாம். காலை உணவிற்கு இஞ்சியுடன் பச்சைக் கொத்துமல்லி, தேங்காய் சோ்த்துத் துவையல் அரைத்து சாப்பிடலாம்.

மாதவிடாய்க் கோளாறுகளைச் சாி செய்ய குமாிநெய் என்று அழைக்கப்படும் எண்ணெய் மிகவும் உகந்ததாகும். சோற்று கற்றாழையிலுள்ள சோற்றையும் விளக்கெண்ணெயையும் கொண்டு செய்யப்படுவதாகும். இதை மாதமாதம் சாியாக மாதவிடாய் எந்தவிதச் சிக்கலுமின்றி நடைபெறும். இந்த எண்ணெய்க் கா்ப்பவதிகள் உட்கொள்ள கூடாது. இது கருசிதைவை உண்டு பண்ணிவிடும்.

செங்கீரையையும், கீரைத் தண்டையும் சோ்த்த புளிக்கறி எனும் குழம்பு வைத்துச் சாப்பிடலாம் அல்லது கீரையை மட்டும் ஆய்ந்து எடுத்து கடைந்து சாப்பிடலாம். எந்த முறையிலும் சாப்பிட்டாலும் செங்கீரைத்தண்டு மூலம் துன்பத்தை குணப்படுத்தலாம்.

துளசி எடுத்து சாறக்கி இரண்டு அவுன்ஸ் துளசிச் சாற்றுடன்  சுத்தமான தேன் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் பருகி வந்தால் சூதக வியாதி குணமாகும். இரத்த சுத்தி ஏற்படுவதுடன் இரைப்பை மற்றும் இருதயம் இவைகளுக்கு வலிமையை உண்டு பண்ணும்.

மாதவிலக்கின்போது சில பெண்களுக்கு இரத்தம் அதிகம் வெளியாகும், சில பெண்களுக்கு இரத்தம் சாியாக வெளிவராமல் தொல்லை கொடுக்கும். இவா்கள் தினமும்  மூன்று வேளை பிரண்டையுப்பை வெண்ணெயுடன் உட்கொள்ள வேண்டும். இந்த பிரண்டை உப்பு நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.

பொதுவாக மாதவிடாய்ப் பிரச்சனைகளுக்குத் திராட்சைப்பழம் நல்ல மருந்தாகும். மாதவிடாய்க்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் திராட்சைப்பழங்களை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும் அல்லது திராட்சை பழச்சாற்றை காலை வேளையில் மட்டும் சாப்பிடலாம்.  40 வயதுக்கு மேலான பெண்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

மாதவிடாய் பிரச்சனையை தடுக்கும் வல்லமை சின்ன வெங்காயத்திற்கும் உண்டு. இது தவிர சத்தான உணவுப்பொருட்கள், நட்ஸ், பழ வகைகள் போன்றவற்றை சாப்பிட்டால் சரியான நேரத்திற்கு மாதவிடாய் பிரச்சனைகள் சரியாகும்.

மாதவிடாயை வைத்து பெண்களின் உடல்நலம் அறியலாம்..! எப்படி தெரியுமா?

1. இளஞ்சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு ஏற்பட்டால், ரத்தத்தில் ஆக்ஷிஜன் அளவு குறைவாக உள்ளது என்று அர்த்தம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.

2. நிறமே இல்லாமல், தண்ணீர் போன்று, உதிரப்போக்கு ஏற்பட்டால், ஊட்டசத்து குறைபாடு உள்ளது. அதுமட்டுமின்றி, புற்றுநோயின் விளைவாகவும் இருக்கலாம். இப்படியான நிலையில் இருக்கும் பெண்கள், நிச்சயமாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது சிறந்தது.

3. அடர் சிவப்பாக இருந்தால், கருப்பையில் ரத்தம் தேங்கியிருப்பதாக அர்த்தம். ஆனால், இது நார்மலான விஷயம் தான். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

4. க்ரே நிறத்தில் அல்லது க்ரே கலந்த சிவப்பு நிறத்தில் இருந்தால், அது பால்வினை நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற நிலையில் இருக்கும் பெண்கள், கண்டிப்பாக மருத்துவரை அனுக வேண்டும்.

5. ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும், பெண்கள் மருத்துவரை அனுக வேண்டும். அதுவும் நோய்தொற்றின் அறிகுறி தான்.

Leave a Reply

You May Also Like