in

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

இந்த சீசனில் வைட்டமின் ‘சி’ கொண்ட பழங்களில் கமலா ஆரஞ்சு எலுமிச்சை உள்ளிட்டறவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மிக அதிக வைட்டமின் ‘சி’ கொண்டது நெல்லிக்கனி. அதைத்தான் நீண்ட நெடுங்காலம் மரணமில்லாப் பெருவாழ்வு தரும் அதிசயக் கனி என்று சொல்லி ஒளவையார், மன்னர் அதியமானுக்கு கொடுத்தார்.

அப்படிப்பட்ட நெல்லிக் கனி சாப்பிட்டால், தொற்றுகள் ஏதும் ஏற்படாமல், நூறு வயது இளமையுடன் வாழலாம்! நெல்லி ஜூஸ், துவையல் அல்லது துருவி காய்களில் சேர்ப்பது, கஞ்சியில் சேர்ப்பது என்று சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரையில் வைட்டமின் ‘சி மற்றும் இரும்புச் சத்து இருக்கிறது. முள்ளங்கியும் சாப்பிடலாம். 10 மிளகு இருந்தால், பகையாளி வீட்டுக்குக்கூட சாப்பிடப் போகலாம்! என்பார்கள். அந்தளவுக்கு அது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

வைரஸ் தொற்றுக்கும் மிக நல்லது. பசு நெய்யும் மிக நல்லது. தவிர, அரோரொட்டி மாவும் ஒரு ஸ்பூன் அளவில் கிளறி சாப்பிடலாம். இதில் வைட்டமின் ‘சி’ உள்ளது. நம் உடலின் உஷ்ணத்தையும் சரிசெய்யும். அதனால் ஏற்படும் சீதபேதியும் சரியாகும்.

பொதுவாகவே, ஆடாதோடை, கற்பூரவல்லி இலை, சுக்கு, திப்பிலி, லவங்கம், கடுக்காய் தோல், கோஷ்டம், சீந்தில் உள்ளிட்டவை கபத்தைக் குறைக்கும்.