சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை வியாதி என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். நாம் உண்ணும் உணவு பழக்கம், வாழ்கை முறை எல்லாம் மாறிவிட்டது. சர்க்கரை வியாதிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், காயங்கள் மெதுவாக ஆறுதல் ஆகியவை சர்க்கரை வியாதியின் அறிகுறியாகும்.

நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை இவைகளை மாற்றிக் கொண்டால் சர்க்கரை வியாதியில் இருந்து தப்பிக்கலாம்.

நடைப்பயிற்சி

தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வாருங்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்பட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். உடலில் மெட்டாபாலிசம் அதிகரித்து இன்சுலின் அளவை சரியாக்கி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

முழு தானிய உணவுகள்

ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, சிறு தானியங்கள் போன்றவற்றை காலை உணவாக எடுத்து கொள்ளுங்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு வராமல் தடுக்கும். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.

வெந்தயம்

தினமும் 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கும். மேலும் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

பாகற்காய்

அடிக்கடி பாகற்காய் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள இன்சுலின் அளவு அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும்.

கறிவேப்பிலை

தினமும் கறிவேப்பிலை இலைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை முழுவதுமாக தடுக்கலாம். மேலும் இது வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைகளை குறைக்கும்.

கோதுமை

கோதுமையை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை வியாதி நம்மை நெருங்காது. கடைகளில் விற்கப்படும் கோதுமை மாவினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முழு கோதுமையை வாங்கி அதில் மைதா சேர்க்காமல் அரைத்து ஆயில் இல்லாமல் சப்பாத்தி செய்து சாப்பிடவேண்டும்.

நாவல் பழம்

நாவல்பழத்தில் உள்ள துவர்ப்புத் தன்மை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஒரு டீஸ்பூன் நாவல் விதைப் பொடியை நாவல் விதைப் பொடியை குடிக்கலாம்.

வேப்பம்பூ ரசம்

வாரம் ஒருமுறை வேப்பம் பூ ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் தேவையான இன்சுலின் சுரக்கும். மேலும் இது பித்தத்தை தணிக்கும்.

Recent Post