நீங்கள் வாங்கும் முட்டை ஆரோக்கியமானதா? எப்படி கண்டுபிடிப்பது?

தினமும் முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் வாங்கும் முட்டை ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முட்டையின் நிறத்தை வைத்து அதில் புரதம் குறைவாக உள்ளதா அல்லது அதிகமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முட்டையை உடைக்கும் போது அதில் உள்ள மஞ்சள் கரு மூன்று வகையாக இருக்கும். அதாவது ஆரஞ்சு, வெளிர் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆரஞ்சு மஞ்சள் கருவுடன் கூடிய முட்டையில் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகமாக இருக்கும்.

இயற்கை சூழலில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளி, சரிவிகித உணவு ஆகியவை கிடைக்கிறது. இந்த கோழிகள்தான் உடலுக்கு ஆரோக்கியம் உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு வளரும் கோழிகளின் முட்டை மஞ்சள் கரு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

முட்டையின் மஞ்சள் கரு வெளிர் ஆரஞ்சு நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ இருந்தால் அதில் ஆரோக்கியம் மிக குறைவாக இருக்கும்.

தினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Recent Post