முடி உதிர்வா.. இந்த ஷாம்பு போடுங்க.. வீட்டிலே செய்யலாம்..

இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களுக்கும் முடி உதிரும் பிரச்சனை இருக்கிறது. இதனால், அவர்கள் மனஅழுத்தம் உள்ள வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் வந்துவிடுகின்றனர். இதற்கொல்லாம் வீட்டிலேயே தீர்வு உள்ளதை பலரும் மறந்துவிடுகின்றனர்.

சரி, முடி உதிர்வதை குறைக்கும் கற்றாழை ஷாம்பு தயார் செய்வது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 300 எம்.எல்.

பியர்ஸ் சோப் – அரை கப்

ஜோஜோபா எண்ணெய் – போதுமான அளவு

தோல் நீக்கிய கற்றாழை – 1 கப்

வைட்டமின் ஈ எண்ணெய் – 1 கேப்ஸூல்

செய்முறை :

முதலில் தண்ணீரை அடுப்பில் வைக்கவும். தண்ணீர் சூடானதும், அதில் பியர்ஸ் சோப்பை போடவும்.பின்னர், நன்கு காய்ச்சவும்.

இது ஒரு புறம் நடந்துக்கொண்டிருக்க, தோல் நீக்கிய கற்றாழை சதைகளை துண்டாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். பின்னர், சோப்பு தண்ணீரில் முழுவதும் கறைந்ததும், வெளியே எடுத்து வைக்கவும்.

சோப்பு தண்ணீர் சூடு ஆறியதும், கற்றாழைச் சாறு அதோடு ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய் சேர்க்கவும். நன்குக் கலந்துவிட்டு டாப்பவில் ஊற்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள். கற்றாழை ஷாம்பு தயார்.