Search
Search

பல்லிகளை வீட்டில் இருந்து அகற்றுவதற்கான சில டிப்ஸ்..!

palli thollai neenga tips

வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு பயமாக இருக்கும். அது தவறி மேலே விழுந்துவிட்டால் அபசகுனமாகவும் பார்ப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், பல்லிகளை எப்படி நம் வீட்டில் எளிய முறையில் விரட்டுவது என்பதை பார்ப்போம்.

பிரிஞ்சு இலை :

பிரிஞ்சி அல்லது பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை. இந்த இலையை நெருப்பில் எரித்தால் கிளம்பும் புகையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள். பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.

முட்டை ஓடு:

உடையாத கோழி முட்டை ஓடு இருந்தால், அதனை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வையுங்கள். நம் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அது பல்லிக்கு அச்சமூட்டும் ஒரு பொருள்.

வெங்காயம் :

வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துண்டை, பல்லி உலாவும் இடங்களில் வைத்துவிடுங்கள். அப்போது, பல்லியின் தொந்தரவு குறையும். மேலும், வெங்காய சாற்றை அப்பகுதியி;ல் தெளித்தாலும் பல்லி வராது.

பூண்டு:

பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாவே ஆகாத பொருட்களில் ஒன்று. எனவே அவற்றை பல்லி எப்போதும் திரியும் இடங்களில் வைத்து விட்டால், அந்த இடத்தில் இருந்து பல்லி காணாமல் போய்விடும்.

Leave a Reply

You May Also Like